நிலவோடு நடை பழகிய பொழுதுகள்...பொழுது:01
நீ உன் முத்து பற்களால்
Geometry Box மூடி நோகாமல்
திறந்து கொடுத்த
எச்சில் மாதுளை முத்துக்கள்,
இப்போது கோடி கொடுத்தாலும் கிடைக்காது
நனைந்தும் நகர்ந்தது எனக்காக...
அன்று
"இது கடலுக்கு போகும்" என்று
உன் காதில் பூ வைத்து... மழை நீரில்
நான் விட்ட காகித கப்பல்
கிடைக்குமா...?
நேரம் அறியாமல்
பகலில் வண்ணத்துப்பூச்சிகளையும்,
இரவில் மின் மினி பூசிகளையும்
நாம் தேடி ஓடிய பொழுதுகள்
பொறாமை என்றால் என்ன என்பதை முதன் முதலில்
உன்னால் தான் கண்டு கொண்டேன்
நீ இன்னொரு வகுப்பு தோழனுடன் பேசி கொண்டு இருந்த போது...
நான் கிறுக்கிய
ஓவியங்களும் (?)
உன் புத்தத்தில்
ஒளிந்து குட்டி போட
காத்து கிடந்த
மயிலிறகும்
பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன
கிடைக்குமா...?
வானத்து நட்சத்திரங்களை
எண்ணி எண்ணி நாம்
களைத்து போன அந்த
இரவுகள்
No comments:
Post a Comment