Friday, 10 February 2012

மனம் நழுவி காதலில் ...

 

உருகி  தவித்தல்
    தவித்து ஒளித்தல்...
         மறைந்து ரசித்தல்
                ரசித்தலை  மறைத்தல்  
                     விரும்பி  நினைத்தல்..
                        நினைத்தலை  தவிர்த்தல் ..
                                புரிந்து  தெளிதல்
                                     தெரிந்தும் விழித்தல் ...
- காதலின் பாதிப்புகள்

முழு நிலவின் 
             சில்லென்ற  ஒளியிலும்
                       தீயாக சுட்டெரிக்கும் - "உன் கனவுகள்  இல்லாத இரவுகள் "
 
இதயத்தின் லப் டப்
ஒலிகளுக்கு இடையே ஏற்படும்
சின்னஞ்சிறு  இடைவெளி நேரத்தையும்
கூட நிரப்பி விடுகிறது ... உன் நினைவுகள் 
 
 
உன்னுடனான காதல்
 என்னை கவிஞன் ஆக்காமல்
             காதலன் ஆக்கட்டும் !!!
 
 நான்  அடிமை 
   அந்த  போதைக்கு...
       அதை  தந்த  மதுவுக்கு...  
              அதை சுரந்த  உன் விழிகளுக்கு ...
உன்னை நெருங்க அச்சமாய்  இருக்கிறது 
 அருகாமை தரும் மயக்கத்தால்
 என்ன செய்வேனோ என்பதால்.. 
 
 

என் பார்வையில் படும் போது சிரித்து விட்டு போகிறாய்
ஏதும் தெரியாதவள் போல்...
 
 
இதயத்தின் வாசலில் நீ தென்றல் போல் 
வந்து வந்து போகும் போதே 
எனக்கு தெரிந்து விட்டது
புயலாய் ஒரு நாள் தாக்கி மறைந்து போவாய் என்று !!!
 
  
ஓரே இரவினில் உன்னுடன் காதலின் வெற்றியும்
பின் தோல்வியும் நிகழ்ந்து முடிந்து விடுகிறது...
அந்த அழகான கனவுகளில் 

மறக்க வைக்கின்ற செல்கள் கூட 
மரத்து    பொய் விடுகின்றன
உன்னை மறக்க நினைக்கையில்...
 
 
 
எந்த கவலையையும்  உன் புன்னகை   
மறக்க செய்கிறது..
ஆனால் நீ காணாதது போல் போகும்  வேதனை
மிக கொடியது !
 
 
உன்னிடம் சொல்வதும் விடுவதும்
வாழ்க்கையை  
உணர்தலுக்கும் மறுத்தலுக்குமான போராட்டத்தை போன்றது !!
தீ சுடும் என்று தெரிந்தே
தீண்டி  விட்டேன்   
தீயின்பம்  என்னை  கொல்லும்  சுகத்தினையும் ரசிக்கின்றேன்
ஆனால்...எது  வரை   ?

 

Wednesday, 1 February 2012

நிலவோடு நடை பழகிய பொழுதுகள்

 நிலவோடு நடை பழகிய பொழுதுகள்...பொழுது:01



நீ உன் முத்து பற்களால் 

Geometry Box மூடி நோகாமல் 

திறந்து கொடுத்த 

எச்சில் மாதுளை முத்துக்கள்,

இப்போது கோடி கொடுத்தாலும் கிடைக்காது 

நனைந்தும் நகர்ந்தது எனக்காக...

அன்று 

"இது கடலுக்கு போகும்" என்று 

உன் காதில் பூ வைத்து... மழை நீரில்

நான் விட்ட காகித கப்பல் 






கிடைக்குமா...?

நேரம் அறியாமல் 

பகலில் வண்ணத்துப்பூச்சிகளையும்,

இரவில் மின் மினி பூசிகளையும்

நாம் தேடி ஓடிய பொழுதுகள்


பொறாமை என்றால் என்ன என்பதை முதன் முதலில்
உன்னால் தான் கண்டு கொண்டேன்
நீ இன்னொரு வகுப்பு தோழனுடன் பேசி கொண்டு இருந்த போது...





நான் கிறுக்கிய 

ஓவியங்களும் (?)

உன் புத்தத்தில்

ஒளிந்து குட்டி போட 

காத்து கிடந்த

மயிலிறகும் 

பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன 


கிடைக்குமா...?

வானத்து நட்சத்திரங்களை

எண்ணி எண்ணி நாம் 

களைத்து போன அந்த

இரவுகள்